Raga: தேசு | Tala: ஆதி பல்லவி:உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு - தோழி
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
அநுபல்லவி:வெள்ளம் போல் புணர்ச்சி விதும்பலே நாடும்
வீணையும் நாதமுமாய் இழைந் தொன்று கூடும்
சரணம்:பழுது பலவும் எண்ணி ஊடலாம் என்று சென்றேன்
பாங்கியே அதுமறந்து கூடலைத்தான் கண்டேன்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து நான் என்ன சொல்வேன்
போதுவாய் திறந்திடும் போதே பறந்து வரும்
பூம்பொறி வண்டினமும் அமர்ந்து தண்டேன் நுகரும்
ஈதுரை மலரினும் மெல்லிது காமம்
எனவே சிலர்தான் அதன் செல்வி தலைப்படுவார்