Raga: வசந்தா | Tala: ஆதி பல்லவி:அன்புடன் தேடிவந்த அரிய விருந்தோம்பும்
பண்பிதே தமிழ்ப் பண்பாம்
பாங்கியே நீ உணர்வாய்
அநுபல்லவி:வன்புகொள்ளாவிதமே வாழ்க்கைத் துணைநலம்சேர்
மக்களன்புடைமையில்
மருவி வரும் செல்வமாய்
சரணம்:இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
இனிதுற வேளாண்மை செய்தற் பொருட்டே; என்னும்
விருந்து புறத்திருக்கத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் உண்ணாத பெருந்தன்மையே பெறுவோம்
வந்த விருந்தினர்கள் சிந்தை மகிழும் வண்ணம்
மலர்ந்த முகம் இன்சொல்லால் வருகை மிகவும் ஏற்று
சொந்தம் மிகப் பாராட்டி சூழவிருந்தே உண்ணைத்
தோன்றும் குறள் இன்பத்தைத் தோகை நீ காண்பாயடி