அனிச்ச மலர் மிகவும் மென்மையானது. அதைப் பறித்து மூக்கின் அருகில் கொண்டு வைத்து முகரத் தொடங்கும்முன், மூச்சுக்காற்று அதன் மீது பட்ட உடனேயே அது பாடி போகும். அவ்வளவு மென்மையான பூ!
அதுபோல, தன் வீட்டுக்கு வருகின்ற விருந்தினரை கண்டவுடனே, அவன் பார்க்கும் வெறுப்பான பார்வையினால், விருந்தினரின் மனம் நொந்து போகும்.ஏன் வந்தோம் என்று நினைத்து வருந்துவார்.
விருந்தினரை வரவேற்று உபசரிக்காதவன் கஞ்சன்.
விருந்தினர் எங்கிருந்தோ, எப்போதாவது, ஆசையோடு வரக்கூடியவர். தனக்கு எவ்வளவு துன்பம் இருந்தபோதிலும், கடுகடுப்பாக பார்க்காமல், கடுசொல் சொல்லாமல், முகமலர்ச்சியோடு, விருந்தினரை வரவேற்று உபசரிப்பவன் உயர்வான பண்பு உடையவன்.