विभेद

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.   (௮௱௫௰௧ - 851)
 

सब जीवों में फूट ही, कहते हैं बुध लोग ।
अनमिल-भाव-अनर्थ का, पोषण करता रोग ॥ (८५१)

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.   (௮௱௫௰௨ - 852)
 

कोई अनमिल भाव से, कर्म करे यदि पोच ।
अहित न करना है भला, भेद-भाव को सोच ॥ (८५२)

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.   (௮௱௫௰௩ - 853)
 

रहता है दुःखद बड़ा, भेद-भाव का रोग ।
उसके वर्जन से मिले, अमर कीर्तिका भोग ॥ (८५३)

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.   (௮௱௫௰௪ - 854)
 

दुःखों में सबसे बड़ा, है विभेद का दुःख ।
जब होता है नष्ट वह, होता सुख ही सुक्ख ॥ (८५४)

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.   (௮௱௫௰௫ - 855)
 

उठते देख विभेद को, हट कर रहे समर्थ ।
उसपर कौन समर्थ जो, सोचे जय के अर्थ ॥ (८५५)

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.   (௮௱௫௰௬ - 856)
 

भेद-वृद्धि से मानता, मिलता है आनन्द ।
जीवन उसका चूक कर, होगा नष्ट तुरन्त ॥ (८५६)

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.   (௮௱௫௰௭ - 857)
 

करते जो दुर्बुद्धि हैं, भेद-भाव से प्रति ।
तत्व-दर्श उनको नहीं, जो देता है जीत ॥ (८५७)

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.   (௮௱௫௰௮ - 858)
 

हट कर रहना भेद से, देता है संपत्ति ।
उससे अड़ कर जीतना, लाता पास विपत्ति ॥ (८५८)

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.   (௮௱௫௰௯ - 859)
 

भेद-भाव नहिं देखता, तो होती संपत्ति ।
अधिक देखना है उसे, पाना है आपत्ति ॥ (८५९)

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.   (௮௱௬௰ - 860)
 

होती हैं सब हानियाँ, भेद-भाव से प्राप्त ।
मैत्री से शुभ नीति का, उत्तम धन है प्राप्त ॥ (८६०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான் காப்பி  |  Tala: அடதாளம்
கண்ணிகள்:
கூடாமை எனும் தீய குணத்தை வளர்க்கும் நோயின்
கேடாகும் இகல் என்பதே - நண்பா
கேடாகும் இகல் என்பதே

மனத்தை மனம் பகைக்கும் மாறுபாட்டைக் கொடுக்கும்
இனத்தையும் கெடுக்கும் இகல் - நண்பா
இதை நீக்க வேண்டும் முதல்

இகல் என்னும் எவ்வ நோயை நீக்கின் அழிவில்லாத
புகழ் இன்பம் நிலையாய் வரும் - நண்பா
புவிச் செல்வம் யாவும் தரும்

இகல் எதிர் சாய்ந் தொழுக வல்லாரை யாவரே
மிகலூக்கும் தன்மையவர் - நண்பா
மேன்மையைக் காட்டும் குறள்

நட்பால் உண்டாகும் நல்ல நீதியின் பெருமிதம்
எப்போதும் துணையாய்க் கொள்வோம் - நண்பா
எல்லோர்க்கும் இனிதே செய்வோம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22