Raga: புன்னாகவராளி | Tala: ஆதி தலைவன்:உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது - நண்பா
கள்ளினும் காமம் இனிது
அள்ளி அணைத்தாள் இன்பம் அழகு மயிலாள் இன்பம்
அத்தனையும் நினைப்பில் ஆழப்பதிந்த இன்பம்
தலைவி:கள்ளினும் காமம் இனிது - தோழி
காணாத நாளும் கொடிது
உள்ளத்தில் உள்ளவர்பால் நானும் உள்ளேனோ
உயிரும் உடலும் ஆனோம் என்ற சொல் வீணோ
கொஞ்சும் கிளியே என்றார் குயிலே மயிலே என்றார்
குலவியே எனை அணைந்தார்
கூடிய நாளை எண்ணின் வாடிய என்னுள்ளமும்
குளிர்ந்து மெய் சிலிர்க்குதடி
அஞ்சல் என்று சொன்னவர்தான் நெஞ்சில் இடம் கொண்டவர்தான்
ஆனாலும் எனைப் பிரிந்தார்
அன்னவரைக் கண்ணெதிரில் காணும் வரை தண்மதியே
அகலா திருக்க நீ வாழியவே
இருவரும்:உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
தலைவி:நினைத்தவர் போன்று நினையார் கொல் தும்மல்
சினப்பது போன்று கெடும்
தலைவன்:நீரினுள் மூழ்கினும் நீலக் குன்றெறினும்
நேரிழை பிரிவு சுடும்
தலைவி:எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தும்
காதலர் செய்யும் சிறப்பு
தலைவன்:இன்னலை நீக்கும் அந்தக் கன்னலை எண்ணும்தொறும்
என்னுள்ள மெல்லாம் இனிப்பு