धर्म पर आग्रह

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.   (௩௰௧ - 31)
 

मोक्षप्रद तो धर्म है, धन दे वही अमेय ।
उससे बढ़ कर जीव को, है क्या कोई श्रेय ॥ (३१)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.   (௩௰௨ - 32)
 

बढ़ कर कहीं सुधर्म से, अन्य न कुछ भी श्रेय ।
भूला तो उससे बड़ा, और न कुछ अश्रेय ॥ (३२)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.   (௩௰௩ - 33)
 

यथाशक्ति करना सदा, धर्मयुक्त ही कर्म ।
तन से मन से वचन से, सर्व रीती से धर्म । (३३)

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.   (௩௰௪ - 34)
 

मन का होना मल रहित, इतना ही है धर्म ।
बाकी सब केवल रहे, ठाट-बाट के कर्म ॥ (३४)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.   (௩௰௫ - 35)
 

क्रोध लोभ फिर कटुवचन, और जलन ये चार ।
इनसे बच कर जो हुआ, वही धर्म का सार ॥ (३५)

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.   (௩௰௬ - 36)
 

'बाद करें मरते समय', सोच न यों, कर धर्म ।
जान जाय जब छोड़ तन, चिर संगी है धर्म ॥ (३६)

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   (௩௰௭ - 37)
 

धर्म-कर्म के सुफल का, क्या चाहिये प्रमाण ।
शिविकारूढ़, कहार के, अंतर से तू जान ॥ (३७)

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.   (௩௰௮ - 38)
 

बिना गँवाए व्यर्थ दिन, खूब करो यदि धर्म ।
जन्म-मार्ग को रोकता, शिलारूप वह धर्म ॥ (३८)

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.   (௩௰௯ - 39)
 

धर्म-कर्म से जो हुआ, वही सही सुख-लाभ ।
अन्य कर्म से सुख नहीं, न तो कीर्ति का लाभ ॥ (३९)

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.   (௪௰ - 40)
 

करने योग्य मनुष्य के, धर्म-कर्म ही मान ।
निन्दनीय जो कर्म हैं, वर्जनीय ही जान ॥ (४०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அம்சத்வனி  |  Tala: ஆதி
பல்லவி:
அறமே முதல் ஆகும் நம் வாழ்வில்
அவனிமீதில் எல்லா உயிர்க்கும் துணைசெய்

அநுபல்லவி:
திறமே பெறும் தெளிவே தரும்
சிறப்போடு செல்வம் சேர்க்கும் குறள் சொல்

சரணம்:
செயற்பாலதோரும் அறனே ஒருவற்
குயற்பால தோரும் பழி; என்றதன்
இயற்பாலதாய் என்றுமே நிலைக்கும்
இதயம் மாசுறாத எண்ணத்தாற் கிளைக்கும்

அழுக்காறு கோபம் ஆசை வன்சொல் நீக்கி
அறத்தால் வளரும் இன்பமே இன்பம்
ஒழுக்காறிதில் உண்மை அன்பு மேவ
ஒருமையோடு மக்கள் பெருமையாக வாழ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22