Raga: சண்முகப்பிரியா | Tala: ரூபகம் பல்லவி:கண்தாம் கலுழ்வ தெவன் கொலோ
தண்டா நோய் தாம்காட்ட யாம் கண்டது
அநுபல்லவி:முன்னால் அவர்முகம் பார்த்ததும் முறுவல்கொண்டு சேர்த்ததுவும்
உன்னாலே நேர்ந்த தன்றோ
என்னால் ஒரு பிழையும் உண்டோ
சரணம்:செயலாற்றும் வகையும் மறந்து சிந்தை வருந்துதே
சிந்துகின்ற கண்ணீரதும் கரைபுரண்டதே
பெயலாற்றா நீருலந்து போனதே உண்கண்
உயலாற்றா உய்வில் நோயை நிறுத்துதே என்முன்
வாராத போதும் கண்கள் வழி பார்த்திருக்கும்
வந்த போதும் பிரிவஞ்சியே துயிலாதிருக்கும்
தீராத துன்பம் இவற்றால் வருந்தும் என் கண்ணே
ஊராரும் தெரிந்து கொள்ள அறை பறை என்னே!