Raga: பேகடா | Tala: ஆதி பல்லவி:வினை செயல் வகை யறிவோம் - நாமே
வினை செயல் வகை யறிவோம்
அநுபல்லவி:நினைவுற்றே ஆராய்ந்து நேரும் பயன்தெரிந்து
நிறை வேற்றவும் விரைந்து
நிகழ்த்துவோம் வகை துணிந்து
சரணம்:செய்வனவும் திருந்தச் செய்திடல் வேண்டும்
சிறிது விட்டாலும் வினைப் பகைத் தீயாய்த் தீண்டும்
உய்வகை உள்ளறிவான் உளம் கொண்டும் முடிப்போம்
உரை தரும் நல்லமைச்சின் முறையிதுவும் படிப்போம்
ஒரு யானையால் கொள்ளலாம் இன்னொரு யானை
ஒட்டாரையும் ஒட்டினால் பெருகும் நம் சேனை
"பொருள் கருவி காலம் வினை இடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்" என்னும் குறள் பொருந்தும்