ईश्वर- स्तुति

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.   ( - 1)
 

अक्षर सबके आदि में, है अकार का स्थान ।
अखिल लोक का आदि तो, रहा आदि भगवान ॥ (१)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.   ( - 2)
 

विद्योपार्जन भी भला, क्या आयेगा काम ।
श्रीपद पर सत्याज्ञ के, यदि नहिं किया प्रणाम ॥ (२)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.   ( - 3)
 

हृदय-पद्‍म-गत ईश के, पाद-पद्‍म जो पाय ।
श्रेयस्कर वरलोक में, चिरजीवी रह जाय ॥ (३)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.   ( - 4)
 

राग-द्वेष विहीन के, चरणाश्रित जो लोग ।
दुःख न दे उनको कभी, भव-बाधा का रोग ॥ (४)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.   ( - 5)
 

जो रहते हैं ईश के, सत्य भजन में लिप्त ।
अज्ञानाश्रित कर्म दो, उनको करें न लिप्त ॥ (५)

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.   ( - 6)
 

पंचेन्द्रिय-निग्रह किये, प्रभु का किया विधान ।
धर्म-पंथ के पथिक जो, हों चिर आयुष्मान ॥ (६)

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.   ( - 7)
 

ईश्वर उपमारहित का, नहीं पदाश्रय-युक्त ।
तो निश्चय संभव नहीं, होना चिन्ता-मुक्त ॥ (७)

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.   ( - 8)
 

धर्म-सिन्धु करुणेश के, शरणागत है धन्य ।
उसे छोड दुख-सिन्धु को, पार‍ न पाये अन्य ॥ (८)

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.   ( - 9)
 

निष्क्रिय इन्द्रिय सदृश ही, 'सिर' है केवल नाम ।
अष्टगुणी के चरण पर, यदि नहिं किया प्रणाम ॥ (९)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.   ( - 10)
 

भव-सागर विस्तार से, पाते हैं निस्तार ।
ईश-शरण बिन जीव तो, कर नहीं पाये पार ॥ (१०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கேதாரம்  |  Tala: ஆதி
பல்லவி:
அகர முதல வெழுத்தென் றறிவோம்-ஆதி
பகவன் முதற்றே உலகெனப் பணிவோம்

அநுபல்லவி:
அகவிருள் நீங்க அறிவொளி தோன்ற
அன்பினில் இன்பம் பெற
துன்பங்கள் யாவும் அற

சரணம்:
கற்ற கல்வியதனால் ஆகும்பயன் இறைவன்
நற்றாள் தொழுதிட நவில் திருக்குறளின்
உற்ற துணையை நமதுளங்கொண்டு போற்றுவோம்
உலகம் கண்ட தமிழ் அருளறம் வாழ்த்துவோம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22