कपट मैत्री

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.   (௮௱௨௰௧ - 821)
 

अंतरंग मैत्री नहीं, पर केवल बहिरंग ।
अवसर पा वह पीटती, पकड़ निहाई ढ़ंग । (८२१)

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.   (௮௱௨௰௨ - 822)
 

बन्धु सदृश पर बन्धु नहिं, उनकी मैत्री-बान ।
है परिवर्तनशील ही, नारी-चित्त समान ॥ (८२२)

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.   (௮௱௨௰௩ - 823)
 

सद्‍ग्रंथों का अध्ययन, यद्यपि किया अनेक ।
शत्रु कभी होंगे नहीं, स्नेह-मना सविवेक ॥ (८२३)

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.   (௮௱௨௰௪ - 824)
 

मुख पर मधुर हँसी सहित, हृदय वैर से पूर ।
ऐसे लोगों से डरो, ये हैं वंचक कूर ॥ (८२४)

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.   (௮௱௨௰௫ - 825)
 

जिससे मन मिलता नहीं, उसका सुन वच मात्र ।
किसी विषय में मत समझ, उसे भरोसा पात्र ॥ (८२५)

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.   (௮௱௨௰௬ - 826)
 

यद्यपि बोलें मित्र सम, हितकर वचन गढ़ंत ।
शत्रु-वचन की व्यर्थता, होती प्रकट तुरंत ॥ (८२६)

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.   (௮௱௨௰௭ - 827)
 

सूचक है आपत्ति का, धनुष नमन की बान ।
सो रिपु-वचन-विनम्रता, निज हितकर मत जान ॥ (८२७)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.   (௮௱௨௰௮ - 828)
 

जुड़े हाथ में शत्रु के, छिप रहता हथियार ।
वैसी ही रिपु की रही, रुदन-अश्रु-जल-धार ॥ (८२८)

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.   (௮௱௨௰௯ - 829)
 

जो अति मैत्री प्रकट कर, मन में करता हास ।
खुश कर मैत्री भाव से, करना उसका नाश ॥ (८२९)

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.   (௮௱௩௰ - 830)
 

शत्रु, मित्र जैसा बने, जब आवे यह काल ।
मुख पर मैत्री प्रकट कर, मन से उसे निकाल ॥ (८३०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஆநந்தபைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
கூடா நட்பே நீ கொள்ளாதே
கூறும் இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பெனும் கருத்துரை

அநுபல்லவி:
நாடாளு வோரிடத்தும் நண்பரைப்போல் நடிப்பார்
நல்ல நூல்கள் பல கற்ற போதிலும்
சொல்ல நல்ல மனம் இல்லை ஆகையால்

சரணம்:
பழுதற நட்டார் போல் நல்லவையே சொல்லினும்
பண்பில் ஒட்டாதவர் சொல் ஒல்லை உணரப்படும்
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்தே வள்ளுவர் சொன்னார்
அதையறிந்து பகையணுகி டாதபடி
எதையும் கண்டுபிடி இனிமையாக நடி
எண்ணம் மறைத்தவர் எண்ணம் சாகவும்
திண்ணமாக மக்களாட்சியில் வாழவும்
Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22