Raga: கானடா | Tala: ஆதி பல்லவி:அவர் நெஞ்சு அவர்க்காதல் கண்டும்
எவன் நெஞ்சே நீ எமக்காகாதது
அநுபல்லவி:எவர் துன்பமுற்றவர்க்குத் துணை எனவோ நினைந்தாய்?
ஏனோ அன்பில்லாதவர் தம்மிடம் நீ பிணைந்தாய்
சரணம்:நெஞ்சமே நீயே துணை வாராது எனை விடுத்தால்
நீளும் இத்துன்பத்திற்கு யாரோ துணை புரிவார்
தஞ்சம் தமரல்லார் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி என்பதும் குறள்மொழி
கண்ணோடும் காதலரைக் காணாமல் ஏங்கி நிற்பாய்
கண்டாலும் ஊடல் கொண்டு பயனும் நுகரமாட்டாய்
முன்னோடும் நெஞ்சே இனி நின்னோடும் சூழ்வார் யார்
சொன்னாலும் கேளாயோ துன்பத்திற் கிடம் நீயோ