Raga: சிந்துபைரவி | Tala: ஆதி பல்லவி:பெரியாரைப் பிழை கூறித் திரியாதே - அது
பேரா இடும்பை தரும் மறவாதே
அநுபல்லவி:எரியால் சுடப்படினும் உயிர் தப்பக் கூடும்
பெரியார் சினத்தீப் பட்டால் வாழ்வே கண்மூடும்
சரணம்:குகையில் தூங்கும் சிங்கத்தை எழுப்பி விடாதே
குன்றன்னவர்க்கே எதிர் மாறுபடாதே
வகை மாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாகும்
தகைமாண்ட தக்கார் செறின் தன் குடியுடன் மாயும்
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னாசெயல் நேர்வது
கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்றது
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை என்றும் போற்றிடு
போற்றலுள் எல்லாம் தலை" எனும் குறள் பாட்டிது