தன் வழியே போய்க் கொண்டிருக்கும் எமனைப் பார்த்து ஒருவன் கையைத் தட்டி அழைத்தால் என்ன ஆகும்?
எமன் வந்து, அழைத்தவரின் உயிரைப் பிடித்துக் கொண்டு போய்விடுகிறான்.
வந்த எமன் வெறும் கையோடு போவானா? போகான்.
அதுபோல, மிகுந்த வல்லமை வாய்ந்த ஒருவனுக்கு வலிமை இல்லாதவன் தீமை செய்தால், தனக்குத் தானே தீங்கை தேடிக் கொள்வது போலாகும்.
அதாவது, தீமை செய்தவனை, வல்லமை வாய்ந்தவன் அழித்தே தீருவான்.
தன்னுடைய ஆற்றல் எத்தகையது? பிறருடைய ஆற்றல் எப்படிப்பட்டது? என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.