Raga: மத்தியமாவதி | Tala: ஆதி பல்லவி:ஊழ்தான் உயர்ந்த சக்தி - உலகில்
உடன்படுமாயின் நம்செயல் எல்லாம் வெற்றி
அநுபல்லவி:வாழ்வுறும் மக்கள் வலிமையைக் காட்டிலும்
சூழ்பெரும் உலகின் அமைப்பே மேலேனும்
சரணம்:வறுமை நோய் புகுத்திட சோம்பலே மிகுவதும்
வளர் செல்வமானது முயற்சியால் சேர்வதும்
பெருமைசேர் கல்விச் செல்வம் பிரிந்து வேறாவதும்
பெரிதும் இயற்கையின் நிகழ்ச்சி என்றே வரும்
"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது; எனக் கூடி
மிகுத்த தன் வல்லமையை வியந்திடக் கூறும்
வேறொன்று சூழினும் தான் முந்தித் தேறும்
உலகிடை ஊழே வலியதென்றாலும்
ஓட்டத்தில் நமக்கது முந்திச் சென்றாலும்
விலகிடா முயற்சியால் ஊழையும் வெல்வோம்
மேவும் திருக்குறள் அறம்செய்து மகிழ்வோம்