சிறு நெருப்பானது பெரிய வைக்கோல் போரை எரித்துச் சாம்பலாக்கி விடும். எச்சரிக்கையாக இருந்திருந்தால் வைக்கோல் போர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
அதுபோல, ஒருவன் குற்றம் செய்து விட்டால், அது அவனுடைய செல்வத்தையும், பதவி பெருமையையும் அழித்துவிடும்.
எனவே, குற்றம் செய்த பின் வருந்திப் பயன் இல்லை.
குற்றமானது பெரிய பகைவனை போன்றது.
அதாவது, குற்றமானது, தன்னிடம் அகப்பட்டவரை விழ்த்திவிடக் கூடிய கொடுமை வாய்ந்தது.
குற்றம் செய்யுமுன், குற்றம் நிகழாத படி, எச்சரிக்கையாக இருந்து, விலக்கிக் கொண்டால், கேடு வராமல் தடுத்துக் கொள்ளலாம்.