Raga: சகானா | Tala: ஆதி பல்லவி:கொலை செய்யும் எண்ணமோ கொண்டீர் நீர் ஐயா
கூடுமோ இது சொல்வீர் நல் வாழ்க்கையில்
அநுபல்லவி:மலையெனவோ உமது வாழ்நாளை மதித்தீர்
மற்ற உயிரைக் கொல்லும்
குற்றமேனோ அடுத்தீர்
சரணம்:"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்று மேலோர்
வகுத்த நல்லாறெனப்படுவதேன் மறந்தீர்
வாழ்ந்திடும் உயிர்களை வதைக்கவோ பிறந்தீர்
தன்னுயிர் நீப்பினும் உயிர்க்கொலை தகுமா
தாழ்விலங்காவதில் உமக்குச் சம்மதமா
மன்னுயிர் ஓம்பும் நல்லறம் விளங்கிடுமா
வண்டமிழ்க் குறள்வரி உன் கண்ணிற்படுமா