Raga: நாதநாமக்கிரியை | Tala: ஆதி பல்லவி:வறுமையைப் போலொரு துன்பமும் இல்லை
வாழ்க்கையில் இதனாலே எத்தனை தொல்லை
அநுபல்லவி:அருமையாய்ப் பெற்றெடுத்த அன்னையும் வெறுத்திடும்
அறம் சாரா நல்குரவால்
பிறன் போலும் நோக்கச் செய்யும்
சரணம்:தொல்குடிப் பிறப் பழிக்கும் விழுப்பமும் கொல்லும்
சொற்பொருள் நன்குணர்ந் தோராயினும் சோர்வு தரும்
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்றுபடும் தொகையாக யாவும்கெடும்
நன்மை எல்லாம் கெடுக்கும் நல்குரவென்னும் நசை
நற்பொருள் நன்குணர்ந்தோராயினும் உண்டோ பசை
இன்மை என்னும் ஒரு பாவி இதன் கொடுமை
இம்மையும் மறுமையும் இன்றிச் செய்யும் சிறுமை
நேற்றுபோல் இன்றும் கொல்ல வருமோ என்றஞ்சுவது
நிறப்பெனும் பெயரது நெருப்பினும் கொடியது
ஆற்றுவார் யாரே என்று அல்லல்பட்டே உழலும்
அதனாலே குறள்வழி இரவும் துணையாய்க்கொள்ளும்