Raga: கமாஸ் | Tala: ஆதி பல்லவி:காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு - பாங்கி
அநுபல்லவி:காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு - பாங்கி
சரணம்:நம்மையும் அறியாமல் தும்மல் போல் தோன்றிவிடும்
நாலுபேர் தெரியவே அம்பலமாக்கப் பெறும்
தம்மை மதியார் பின்னேதாம் செல்லாத் தன்மை உண்டா
தழலிடை வெண்ணெய் அன்றோ தலைவனும் வரக் கண்டால்
முன்னால்நான் ஊடுவேன்காண் என்றுதான் எண்ணிச் சென்றேன்
தன்னால் என் நெஞ்சம் முந்த நானும் தழுவிக் கொண்டேன்
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை என்பதும் குறளுரை