Raga: ஆரபி | Tala: ஆதி பல்லவி:அவையஞ்சாமையே தனிச் சிறப்பாம்
அதுவே பேசுவோர் உடன் பிறப்பாம்
அநுபல்லவி:அவையகத் தஞ்சாமல் பேசுவோர் சிலரே
பகையகத்துச் சாவார் பலர் அதனாலே
சரணம்:ஓடி ஒளியும் பேடி கையில் கூர்வாளோ
உரை சொல்ல அஞ்சுமவன் படிக்கவும் நூலோ
தேடிட வேண்டுமோ இதன் பொருள் காணீர்!
தேறும் நல்லவையினில் பேசவும் முன் வாரீர்!
"வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மையவர்" எனும் குறளின்
தகைமிகும் கற்றவர்முன் செல்லவே சொல்லும்
தயங்காமல் கேள்விக் கெல்லாம் விடை தந்தே வெல்லும்