Raga: மோகனம் | Tala: ரூபகம் பல்லவி:படையின் மாட்சியே - இந்தப்
பார் முழுதும் பேர் விளங்கப்
போர் முனையில் வெற்றி முழங்கும்
அநுபல்லவி:தடையே யின்றி எங்கும் செல்லும்
தன்னாற்றலால் பகையை வெல்லும்
தாங்கிடும் உறுப்பாக மேவிப்
பாங்குடன் வளர் செல்வமாகும்
சரணம்:பெற்ற தன்னாட்சியால் வறுமைநோய் அற்றது
பேரணி வகுப்பிலும் பெருமையே பெற்றது
குற்றமில்லாத் தலை மக்கள் பால் கற்றது
கூற்றுடன்று மேல்வரினும்
கூடி எதிர்க்கும் ஆற்றலதுவே
"ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்" என்னும் குறளுரை
வலிவுள்ள வீரனால் மாண்புறும் போர்ப்படை
மானம் வீரம் நல்லொழுக்கம்
காணும் தேற்றம் நாளும் காக்கும்