Raga: செஞ்சுருட்டி | Tala: ஆதி கண்ணிகள்:மன்னர் தம்மைச் சேர்ந்தொழுகும் சேவை - இது
மாநில அமைச்சருக்குத் தேவை - சொல்லின்
அன்னவர் குறிப்பறிந்தே ஆகும் காலமும் தெரிந்தே
ஆற்றும் வினை போற்றும்
மன்னவர் விழைப விழையாமை - பாரில்
மன்னிய ஆக்கம் தரும் மேன்மை - மேலும்
தன்னினம் இளையர் முறை என்னினும் இகழ்ந்திடாமல்
தலைமை ஏத்தும் நிலைமை
ஒட்டுக் கேட்பதாலே வரும் தீது - மனம்
விட்டுச் சொன்னால் கேட்கலாம் அப்போது - தம்மை
ஒப்புக் கொள்ளப் பட்டாலுமே எப்பொழுதும் மாறில்லாத
உண்மை மனத் திண்மை
ஆன்ற பெரியோரகத்து வாசம் - பெற்றே
அரியவை போற்றின் மிகும் நேசம்
சேர்ந்த நகையும் செவிச் சொல்லுமே அவித்தொழுகத்
தேறும் நலம் கோரும்
அகலாமல் அணுகாமல் இருந்தே - மிக்க
ஆவலுடன் தீக்காய்வார் போல் அமைந்தே - என்றும்
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகப் புகலும் நடைபழக
ஏற்கும் குறள் நோக்கும்