Raga: கௌரிமனோகரி | Tala: ஆதி பல்லவி:பொருள் செயல் வகை யறிவோமே - அது
பொருந்தும் நல்ல வழியில்
போற்றிச் செய்வோமே
அநுபல்லவி:"அருளொடும் அன்பொடும் வாராத பொருளாக்கம்
புல்லார் புரளவிடல்" எனும் குறள் மணி வாக்கும்
சரணம்:குன்றேறி யானைப் போரைக் காண்பது போல
கொண்டதன் கைப்பொருளால் செயும் தொழிலாலே
என்றுமே உயர்வாகி இருட்பகையை அறுக்கும்
எண்ணிய தேய மெல்லாம் ஏற்றும் பொய்யா விளக்கும்
அன்பு பெற்ற குழந்தையாகும் நல்லருளே
அதை வளர்க்கும் செவிலித்தாயாகும் பொருளே
இன்பமும் நல்லறமும் தனக்கிரு பாலும்
எற்றிடவே உலகில் இருந்தர சாளும்