Raga: பாகேஸ்வரி | Tala: ஆதி பல்லவி:செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்குரை
அநுபல்லவி:இல்லாமல் எனை விடுத்தே ஏகுவேன் என்ற சொல்
கொல்லாமல் கொல்லுதே
பொல்லாத நெருப்பிதே
சரணம்:இன்பமான பார்வையும் துன்பமாகத் தோணுதே
இன்னாத பிரிவை எண்ணி என்றன் உள்ளம் வாடுதே
முன்கை வளைகழன்றே என்மெலிவைக் கூறுதே
முன்னம் பிரியேன் என்ற சொல்லை நம்பித் தேறுதே