Raga: கரகரப்பிரியா | Tala: ஆதி பல்லவி:தெரிந்து செயல் வகையைத் தேர்ந்திடல் வேண்டும்
தெளிவு பெற்றே எதையும்
செய்திடல் வேண்டும்
அநுபல்லவி:புரிந்து மக்களாட்சியைப் போற்றிடும் தலைமை
புதுப் புது வகையெல்லாம் சூழ்ந்திடும் நிலைமை
சரணம்:ஆவதைவிடப் பொருள் அழிவதில் குறையவும்
அதனால் வழி பயக்கும் ஊதியம் நிறையவும்
காவலும் ஏவலும் காணவே மிகுத்தும்
கைமுதல் இழக்காத கருத்தினைப் புகுத்தும்
பரிந்திடும் தன்முயற்சிப் பண்பு கெடாமல்
பகை முளைப் பாத்தியில் வளர விடாமல்
தெரிந்த வினத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றுமில்லை யெனுமாம் குறள்