Raga: லதாங்கி | Tala: ரூபகம் பல்லவி:உட் பகைக்கே அஞ்சு வேண்டுமே - நம்
உயிரைக் காத்துக் கொள்ள வேண்டுமே
அநுபல்லவி:எட் பகவன்ன சிறுமைத்தே ஆயினும்
உட் பகை உள்ளதாம் கேடுறும் நோயினும்
சரணம்:இன்பம் தரும் நிழல் நீராயிருப்பினும்
துன்பநோய் தரும் என்றால் தொடுவாரோ எவரேனும்
வன்புள்ள உறவினர் தன்மையும் இதுவன்றோ
வாளினும் கொடியவர் கேளிர் எனல் நன்றோ
புடமிட்ட பொன்னையும் பொடியாக்கும் கருவிபோல்
புணரினும் கூடாத செப்பின் மேல் மூடிபோல்
உடம் பாடில்லாதவர் வாழ்க்கைக் குடங்கருள்
பாம்போடுடன் உறைந்தற்றே எனும் குறள்