Raga: சாருகேசி | Tala: ஆதி பல்லவி:அலர் எழ ஆருயிர் நிற்கும் - இதனைப்
பலரும் அறியார் பாக்கியத்தால்
அநுபல்லவி:மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு மென்மேலும் ஈந்த திவ்வூரே!
சரணம்:ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல்
நீராகவும் நீளும் இந்த நோய் தன்மையில்
யாராலும் தடைசெய்ய முடியுமோ எம்காதல்
அனலிடை நெய் சொரிந்தால் அணையுமோ பாரில்
தலைவி:-
அஞ்சுதல் வேண்டாமென்று கைமேல் அடித்துச் சொன்னார்
ஆயினும் நாணும்படி நம்மைவிட்டு ஏன்பிரிந்தார்
மிஞ்சும் இவ்வலருக்கு நானும் நாணுவதுண்டோ
வேண்டிய தெல்லாம் பெற மீண்டும் விரைவர் அன்றோ!