Raga: இந்துஸ்தான் காப்பி | Tala: அடதாளம் கண்ணிகள்:கூடாமை எனும் தீய குணத்தை வளர்க்கும் நோயின்
கேடாகும் இகல் என்பதே - நண்பா
கேடாகும் இகல் என்பதே
மனத்தை மனம் பகைக்கும் மாறுபாட்டைக் கொடுக்கும்
இனத்தையும் கெடுக்கும் இகல் - நண்பா
இதை நீக்க வேண்டும் முதல்
இகல் என்னும் எவ்வ நோயை நீக்கின் அழிவில்லாத
புகழ் இன்பம் நிலையாய் வரும் - நண்பா
புவிச் செல்வம் யாவும் தரும்
இகல் எதிர் சாய்ந் தொழுக வல்லாரை யாவரே
மிகலூக்கும் தன்மையவர் - நண்பா
மேன்மையைக் காட்டும் குறள்
நட்பால் உண்டாகும் நல்ல நீதியின் பெருமிதம்
எப்போதும் துணையாய்க் கொள்வோம் - நண்பா
எல்லோர்க்கும் இனிதே செய்வோம்