கள்ளைக் குடித்தவன் மயங்கிக் கூத்தாடுவான். என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பது, அவனுக்கே தெரியாது.
அதுபோல, பைத்தியக்காரன் கையில் ஒரு பொருள் கிடைத்தால், அதன் அருமையும் தெரியாது. அதை உபயோகப்படுத்துவதையும் அறியமாட்டான் (செல்வத்தையும் குறிப்பிடலாம்).
அவன் கையில் உள்ள பொருளின் நிலைமை என்ன ஆகுமோ என மற்றவருக்கும் திகைப்பு உண்டாகும்.
முட்டாள் கைக்கு செல்வம் கிடைத்தாலும், அதை நல்ல வழியில் பயன்படுத்த தெரியாமல், தாறுமாறாக எந்த வழியிலோ இழந்து நிற்பான்.