போர் பயிற்சி பெற்ற குதிரையானது போர்க்களத்துக்கு வீரனை ஏற்றிக்கொண்டு செல்கிறது.
ஆனால், அங்கே முன்னேறி பாய்ந்து செல்லாமல், வீரனை கீழே தள்ளி விட்டு ஓடிவிட்டது. அறிவு இல்லாத குதிரையினால் தோல்வியும் அவமானமும் உண்டாகின்றன.
அதுபோல, ஆபத்தான வேளையில் துன்பமான சூழ்நிலையில், அந்த அறிவற்ற குதிரையைப்போன்று கைவிட்டு, நழுவிவிடும் நண்பரை கொண்டிருப்பதைவிட நண்பரே இல்லாமல், தனித்து இருப்பதே சிறப்பாகும்.
(ஒருவனிடம் வசதி இருக்கும்பொழுது, அவனைச் சுற்றிச் சுற்றி வந்து, ஆவனுடைய பொருளில் உண்டு, களித்து அவனுக்குத் துன்பம் வரும்போது, அவனை விட்டு ஓடி விடுபவர் பலர்).