மலையின் மீது ஏறி நின்றால், யானைச் சண்டையை நன்றாகவும், பயம் இல்லாமலும் பார்க்கமுடியும். அதுபோல, ஒருவன் கையில் போதுமான பொருள் வசதி இருந்தால், ஒரு செயலை மேற்கொண்டு, திறமையாகவும், துணிவாகவும் செய்து முடித்துவிடலாம்.
திறமையும், தைரியமும் இருந்தால் மட்டும் போதாது பணம் இருந்தால்தான் எந்த செயலையும் செய்ய முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது.