குளிர்காலத்தில் குளிரைப் போக்கிக்கொள்வதற்காக நெருப்பை மூட்டி, அருகில் உட்கார்ந்து குளிர் காய்வார்கள்.
நெருப்பின் அருகில்- நெருங்கி இருந்தால் நெருப்புச் சுடும். ஆனால் அதற்காக அதை விட்டு விலகி இருந்தால் குளிர் போகாது.
அதுபோல, முன்கோபம் உள்ள மன்னரிடம் மிகவும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தால் துன்பம், தொல்லை, அவமதிப்பு நேரிடக்கூடும்.
ஆனால், தொடர்பு இல்லாமல் விலகி இருந்தாலும், மன்னரால் கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்காமலும் போகலாம்.
எனவே, சிறிது அளவு நெருங்கி இருந்தும், அன்போடு விலகி இருந்தும் அளவோடு பழகுவது நல்லது.