ஒருவருக்கு திடமான அறிவு எது என்றால் அது ஊக்கமே ஆகும்.
ஊக்கம் இருந்தால், நல்ல செயல்களையும், மக்களுக்கு நன்மைகளையும் செய்து சிறப்பு அடையலாம்.
ஊக்கம் இல்லாதவர் மரத்தைப் போன்றவர். இயற்கையான சாதி மரங்களுக்கும் இம்மரங்களுக்கும் வேறுபாடு என்னவென்றால் மரமானது காய், கனி, நிழலைத் தருவதோடு சரி. சில மரங்கள் பலவகை பொருள் செய்வதற்கு பயன்படும். இதர மரங்கள் எரிபொருளாகி உதவும்.
ஊக்கம் இல்லாதவர்கள் தோற்றத்தில் மக்களாய் இருப்பார்கள். அதுவே அவருக்கும் மரத்திற்கும் உள்ள வேறுபாடு.