மலைகள், மரங்கள், விலங்குகள், கட்டடங்கள், உயிர் இனங்கள் இவை யாவும் பூமியில் உள்ளன.
ஆனால், அவற்றினால் பூமிக்கு பாரம் இல்லை. அதாவது சுமை இல்லை.
வேறு எதனால் பாரம் ஏற்படுகிறது?
கொடுங்கோலனான அரசனும், அவனுக்கு ஆலோசகர்களாக அமர்ந்திருக்கும் கல்வி அறிவு இல்லாத மூடர்களுமே, இந்த பூமிக்கு பாரமானவர்கள்.
அத்தகைய கூட்டத்தாரால் மக்கள் சொல்லமுடியாத துன்பத்தை அடைவார்கள். நாட்டுக்கும் அழிவு உண்டாகும்.
அதனால், அக்கூட்டத்தார் பூமிக்குச் சுமையானவர்கள் என மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றனர்.