தனம் காத்த பூதம் என்றும், புதையலைப் பூதம் காத்துக்கொண்டிருக்கிறது என்றும் மக்கள் கூறுவர்.
பேய் காத்த செல்வம் பெரிதானாலும் அதனால் பலன் இல்லை, ஆசையை மட்டும் உண்டாகும்; ஆனால் அதை நெருங்க மக்கள் பயப்படுவார்கள். இச் செல்வத்தால் பேய்க்கும் பயனில்லை.
அதுபோல, கலபமாக அணுகமுடியாத தன்மையும், சிடுமூஞ்சித்தனமும் உள்ளவனது திரண்ட செல்வம், பேய் காத்துக் கொண்டிருக்கும் செல்வத்தை போன்றது.
அத்தகைய செல்வத்தால், யாருக்கும்- அதை வைத்திருப்பவனுக்கும்கூட எவ்விதப் பயனும் கிடையாது.