மேலான வாழ்வு எது?
பழிபாவம் எதுவும் இல்லாமல் வாழ்வதே சிறப்பாகும்.
செல்வமோ, பதவியோ சிறப்பை தந்துவிடாது.
தன்னிடம் சிறிது அளவு குற்றம் கூட வராமல் கவனமாக காத்துக் கொள்ள வேண்டும்.
(குற்றம் செய்வதில் பெரிய குற்றம், சிறிய குற்றம் என்பது இல்லை)
எதிர்பாராமல் தன்னிடம் தினையளவு குற்றம் உண்டாகி விட்டாலும் பழி பாவத்துக்கு பயந்து அதனை அளவாக நினைக்க வேண்டும்.
அப்படிக் கருதினால் தான், குற்றம் நிகழாமல் தடுத்து கொண்டு, மேலான வாழ்வு வாழ முடியும்.
பழி, பாவம் என்பது திறமையான சொல் குற்றம்.
தினை, பனை நண்பன அளவை குறிப்பன.