நல்ல மண்ணைக் கொண்டு வேலைப்பாடுடன் அழகாக செய்யப்பட்ட பொம்மையினால் என்ன உபயோகம்? சிறிது நேரம் பார்க்கலாம், ரசிக்கலாம். அதோடு சரி!
அதுபோல, நுட்பமான புத்திக்கூர்மையும், சிறப்புமிக்க அறிவும், ஆராய்ந்து காணும் அறிவும் இல்லாதவன் மிகுந்த அழகுடன் காணப்பட்டாலும் என்ன பயன்?
அழகான மண் பொம்மையைப் போன்றவனே!
கல்வி அறிவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பல.
அழகு முக்கியமல்ல. கல்வியே சிறப்புடையது.