நாள்தோறும் ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ, குழாயிலோ குளிக்கிறோம். உடல் சுத்தம் அடைகிறது. அந்தத் தூய்மை தண்ணீரால் அமைகிறது.
அதுபோல, மனத் தூய்மையை பெறுவது எப்படி?
அதாவது; பொய் பேசாத வாய்மையால் தூய்மை கிடைக்கும். அந்தக்கரணங்கள் நான்கு என்று சொல்லப்படுவன; மனசு, புத்தி, சித்தம், அகங்காரம், அதாவது; மனம், அறிவு, நினைவு, முனைப்பு ஆகியன.