मिध्याचार

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.   (௨௱௭௰௬ - 276) 

मोह-मुक्त मन तो नहीं, है निर्मम की बान ।
मिथ्याचारी के सदृश, निष्ठुर नहीं महान ॥  (२७६)


तमिल (தமிழ்)
நெஞ்சிலே ஆசையை விடாதவர்களாய், வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்! (௨௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை. (௨௱௭௰௬)
— மு. வரதராசன்


மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை. (௨௱௭௰௬)
— சாலமன் பாப்பையா


உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை (௨௱௭௰௬)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺𑀷𑁆 𑀢𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀧𑁄𑀮𑁆 𑀯𑀜𑁆𑀘𑀺𑀢𑁆𑀢𑀼
𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀭𑀺𑀷𑁆 𑀯𑀷𑁆𑀓𑀡𑀸𑀭𑁆 𑀇𑀮𑁆 (𑁓𑁤𑁡𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu
Vaazhvaarin Vankanaar Il
— (Transliteration)


neñciṉ tuṟavār tuṟantārpōl vañcittu
vāḻvāriṉ vaṉkaṇār il.
— (Transliteration)


None so cruel as the posing ascetic Who lives by deceit without renouncing by heart.

तेलुगु (తెలుగు)
విగ్రహింప లేక నియతాత్ము లట్లుండు
వారికన్న ద్రోహపరులు లేరు. (౨౭౬)


मलयालम (മലയാളം)
ദേഹേച്ച്ഛകളൊഴിഞ്ഞെന്ന നാട്യം കാട്ടുന്ന വഞ്ചകൻ അന്യരെ കബളിപ്പിക്കും പെരും ചതിയനാണവൻ (൨൱൭൰൬)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಮನಸ್ಸಿನಲ್ಲಿ (ಆಶೆಗಳನ್ನು) ತೊರೆಯದೆ, ತೊರೆದವರಂತೆ ನಟಿಸುತ್ತ ವಂಚಿಸಿ ಬಾಳುವವರಿಗಿಂತ, ಕ್ರೂರ ಮನಸ್ಸಿನವರು ಬೇರೆ ಇಲ್ಲ. (೨೭೬)

संस्कृत (संस्कृतम्)
मनोवैराग्यमप्राप्य विरक्त इव यो नर:।
वर्तते कपटाचार: कठिनो नास्ति तत्सम:॥ (२७६)


सिंहाली (සිංහල)
කෙලෙසුන් දුරු නොකර - දුරු කළ ලෙසට අඟවා දිවි ගෙවන තවුසන් - පමණ නපුරෝ නොමැත ලෙව්හි (𑇢𑇳𑇰𑇦)

चीनी (汉语)
未得道而僞作得道之狀以欺人欺世者, 其心之苦無以復加也. (二百七十六)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Amati-lah manusia yang tidak menolak dunia di-hati-nya, tetapi pura2 berjalan saperti orang yang suchi, dan menipu orang pula: tidak-lah dapat kamu menjumpai bangsat yang lebeh malang dari- pada-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
수도자인척 가장하고 세상을 속이는 자처럼 잔인한 자는 없다. (二百七十六)

रूसी (Русский)
Наиболее жестокими являются те люди, которые ведут жизнь, маскируясь под святош, хотя в глубине души они не отринули соблазны мира

अरबी (العَرَبِيَّة)
لا يوجد فى الأحياء أحد أشد قساوة فى قلبه مثل من يتظاهر بالتنسك وليس بناسك (٢٧٦)


फ्रेंच (Français)
Il n’y a pas de plus durs de coeur que ceux qui n’ont pas renoncé dans leur for intérieur et qui vivent, à l’instar des pénitents, en trompant les hommes charitables.

जर्मन (Deutsch)
Niemand ist hartherziger ah der, der fälschlich vorgibt, ein Asket zu sein, in seinem Herzen aber nicht entsagt.

स्वीडिश (Svenska)
Värre hycklare finns icke än de som utan hjärtats fromhet uppträder falskt i fromma asketers skepnad.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Duriori oculu uemo est qunm ille, qui, quamvis animo poenitentia carens, poenitentem simulans fraude vivit. (CCLXXVI)

पोलिश (Polski)
Nikt zaprawdę na świecie nie bywa tak podły Jak ten, który świętoszka udaje.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22