ஒரு வேடன் காட்டில் வலையை பரப்பி, தானியத்தை அதன் மேல் போட்டுவிட்டு, புதரில் மறைந்து கொள்கிறான்.
தானியத்தை தின்ன வரும் பறவைகள், சிக்கிக் கொள்கின்றன.
வேடன், பறவைகளைப் பிடித்துக் கொள்கிறான்.
அதுபோல, பொய்யான தவவேடத்தில் ஒருவன் இருந்துகொண்டு பாமர மக்களை ஏமாற்றி தகாத, தீய செயல்களினால் சுகபோகங்களை அனுபவித்துச் சொத்து சேர்க்கிறான். போலி வேடதாரியின் செயலும் வேடன் செயலைப் போன்றதே!
(இக்காலத்திலும், பொய் வேடதாரிகள் பலர், அறிவற்றவர்கள் ஏமாற்றி திரிவதைக் காணலாம்)