मध्यस्थता

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௮ - 118) 

सम रेखा पर हो तुला, ज्यों तोले सामान ।
भूषण महानुभाव का, पक्ष न लेना मान ॥  (११८)


तमिल (தமிழ்)
தன்னைச் சமனாகச் செய்து கொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல அமைந்து, ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும் (௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். (௱௰௮)
— மு. வரதராசன்


முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம். (௱௰௮)
— சாலமன் பாப்பையா


ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும் (௱௰௮)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀫𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼 𑀘𑀻𑀭𑁆𑀢𑀽𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑁄𑀮𑁆𑀧𑁄𑀮𑁆 𑀅𑀫𑁃𑀦𑁆𑀢𑁄𑁆𑀭𑀼𑀧𑀸𑀮𑁆
𑀓𑁄𑀝𑀸𑀫𑁃 𑀘𑀸𑀷𑁆𑀶𑁄𑀭𑁆𑀓𑁆 𑀓𑀡𑀺 (𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Samanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal
Kotaamai Saandrork Kani
— (Transliteration)


camaṉceytu cīrtūkkuṅ kōlpōl amaintorupāl
kōṭāmai cāṉṟōrk kaṇi.
— (Transliteration)


To be unbiased like an unswerving weighing scale Is an ornament for the great.

तेलुगु (తెలుగు)
తూచు కఱ్ఱవిధము తూగినచో బుధ్ధి
బుధుల కదియె తగిన భూషణమ్ముః (౧౧౮)


मलयालम (മലയാളം)
മുമ്പിലും തൂക്കിടുമ്പോഴും സമം നിൽക്കും തുലാസ്സുപോൽ മനം നിഷ്പക്ഷമായ്നിൽപ്പതഴകാകുന്നു വിജ്ഞരിൽ (൱൰൮)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಮೊದಲೇ ತಾನು ಸಮನಾಗಿ ನಿಂತು, ಸರಿತೂಗುವ ತಕ್ಕಡಿ ಕೋಲಿನಂತೆ, ಒಂದು ಪಕ್ಕಕ್ಕೆ ಬಾಗದೆ ಸಮತೋಲವನ್ನು ತೋರಿಸುವುದು ತಿಳಿದವರಿಗೆ ಭೂಷಣ. (೧೧೮)

संस्कृत (संस्कृतम्)
मध्ये स्थिता तुला द्रव्यं न्यायतस्तुलयेद्यथा ।
तथा निष्पक्षपातित्वं माध्यस्थं लक्षणं सताम् ॥ (११८)


सिंहाली (සිංහල)
හොඳහැටි විමසමින්- කිරනා තූලාවක් මෙන් පසෙකට නො නැමීම- සාදු දනහට වේ ය අබරණ (𑇳𑇪𑇨)

चीनी (汉语)
不偏不倚, 如秤之準, 乃仁者之榮. (一百十八)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Lihat-lah palang penimbang, kerana ia amat lurus dan menimbang dengan adil: kemuliaan orang yang bijaksana sa-umpama itu-lah dan tidak terpaling ka-mana pehak pun.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
천칭처럼 공평하게 존재하는 것은 훌륭한 사람을 위한 보석이다. (百十八)

रूसी (Русский)
Лишь мудрых украшают беспристрастие и ровное спокойствие,,оторые подобны коромыслу весов при одинаково нагруженных чашах.

अरबी (العَرَبِيَّة)
الحكيم فضله أن لا ينحرف عن العدل فهو كمثل قسطاس مستقيم لا ينحرف ولا يميل (١١٨)


फ्रेंच (Français)
Tels que la balance qui d’abord a les plateaux en équilibre et qui pèse ensuite le poids à elle confié, les sages n’inclinent d’aucun côte et c’est là, leur parure.

जर्मन (Deutsch)
Der Schmuck des Weisen ist, sich keiner Seite anzuschließen, sondern unparteiisch zu bleiben wie die Zunge einer richtigen Waage.

स्वीडिश (Svenska)
Att stå fast och omutlig såsom tungan jämn på vågen, det är visa människors främsta prydnad.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Ad instar librae, quae pari momento quod justum est librat, cum tranquillitate in nullam partem inclinari, perfectorum ornamen-tum est. (CXVIII)

पोलिश (Polski)
Wiedzą ludzie, że wagi ten człek nie przechyli, Aby zyskać na krzywdzie nędzarza.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தராசும் சான்றோரும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மணனம் பிறழாமல், எத்தகைய காரியமானாலும், பாரபட்சமில்லாமல் நடுநிலைமையோடு, நியாயமாக நடந்து கொள்பவர் யார்? எப்படி?

ஒரு பொருளை, அதன் எடைக்கு சமமாக தூக்கி நிறுத்தி காட்டுகிறது தூக்குக்கோல் என்னும் தராசு.

அதுபோல, எந்த காரியத்திலும், எவரிடத்திலும் நடுநிலைமை பிறழாமல், நடந்து கொள்வதே சான்றோருக்கு புகழ் தரும்.

(இக்காலத்தில், நீதிபதிகளும், ஊர் பஞ்சாயத்தார்களும் நீதி வழுவாது, தீர்ப்பு வழங்குவது புகழ் தரும்).

(வியாபாரிகள் தராசில் கள்ளத்தனம் செய்யாமலும், நியாயவிலை கடைகள், கூட்டுறவு நிலையங்கள் எடையில் மோசடி செய்யாமலும் நடந்து கொண்டால் பொது மக்கள் பாராட்டுவார்கள்).


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22