ஒருவர் செய்த உதவியினால் நன்மை உண்டாகிறது. ஆனால் அது அளவில் சிறிதாக இருந்தாலும் அந்த உதவியினால் ஏற்பட்ட பயனை கருதும் அன்புடையோர் என்ன நினைப்பார் என்றால் திணை அளவு சிறிது ஆனாலும், பனை அளவாக மிகப் பெரிதாக எண்ணி போற்றுவார், அவர் பண்பு உடையவர். திணை அளவான சூரணம் மருந்துப்பொடி, நோயை குணப்படுத்திவிடுகிறது.
வழியில் திடீரென மயக்கமுற்று, நா வரண்டு கிடப்பவர் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, சிறிது தண்ணீரை குடிக்க செய்ததும் களைப்பு நீங்கி எழுந்துவிடுகிறார். இப்படி எத்தனையோ சிறு சிறு உதவியினால் நன்மை உண்டாகிறது.
தினை என்பது அரிசியின் குறைந்த அளவான தானியம்; பனை என்பது பனைமரம், உயரமானது. சிறிதுக்கும் பெரிதுக்கும் வேறுபாடு குறிப்பிடுவது.
மற்றொரு கருத்து: மற்ற மரங்களைப் போல் அல்லாமல், பனை மரத்தை வளர்ப்பதில் சிரமமே இல்லை. மேலும், அதனால் பயன் அதிகம். பனம்பழம், பனங்கள், பதநீர், பனை ஓலை, உத்தரம், தூண் இவ்வாறு பலவித பயன் உண்டாகிறது.