ಜೂಜು

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.   (௯௱௩௰௧ - 931) 

ಜೂಜಿನಲ್ಲಿ ಗೆಲುವುದಾದರೂ ಜೂಜನ್ನು ಬಯಸಬಾರದು; ಆ ಗೆಲ್ಲುವಿಕೆ ಕೂಡ, ಗಾಳದ ತುದಿಯ ಲೋಹವನ್ನು ಮೀನು (ಆಹಾರವೆಣ್ದು ಎಣಿಸಿ) ನುಂಗಿದಂತೆ.  (೯೩೧)

ტამილური (தமிழ்)
தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம் (௯௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது. (௯௱௩௰௧)
— மு. வரதராசன்


வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம். (௯௱௩௰௧)
— சாலமன் பாப்பையா


வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும் (௯௱௩௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀡𑁆𑀝𑀶𑁆𑀓 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀺𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀘𑀽𑀢𑀺𑀷𑁃 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀢𑀽𑀉𑀫𑁆
𑀢𑀽𑀡𑁆𑀝𑀺𑀶𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀫𑀻𑀷𑁆𑀯𑀺𑀵𑀼𑀗𑁆𑀓𑀺 𑀅𑀶𑁆𑀶𑀼 (𑁚𑁤𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ventarka Vendritinum Soodhinai Vendradhooum
Thoontirpon Meenvizhungi Atru
— (Transliteration)


vēṇṭaṟka veṉṟiṭiṉum cūtiṉai veṉṟatū'um
tūṇṭiṟpoṉ mīṉviḻuṅki aṟṟu.
— (Transliteration)


Don’t gamble even if you win for it draws you in Like fishes drawn to shining baits.

ჰინდი (हिन्दी)
चाह जुए की हो नहीं, यद्यपि जय स्वाधीन ।
जय भी तो कांटा सदृश, जिसे निगलता मीन ॥ (९३१)


ტელუგუ (తెలుగు)
చేప గాలమందు జీక్కెడు విధమౌను
గెలుపు సిద్ధమైన వలదు జూదు. (౯౩౧)


მალაიალამი (മലയാളം)
വിജയം ബോദ്ധ്യമെന്നാലും ചൂതാട്ടമൊഴിവാക്കണം ചൂതിൽ ലഭിച്ച വസ്തുക്കൾ മീൻ വിഴുങ്ങിയ ചൂണ്ടയാം (൯൱൩൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
न कुर्याज्जयशीलोऽपि द्यूतं, नश्येज्जितं धनम् ।
मक्ष्याशया मीनभुक्तजलोद्गारसमं भवेत् ॥ (९३१)


იაპონური (සිංහල)
නො කැමති විය යුතූය - සුදුව දිනිය හැකි වුව දිනුව දැය සම වේ - බිලිය සමගින් ගිලූ ඇමකට (𑇩𑇳𑇬𑇡)

ჩინური (汉语)
卽使可, 亦莫賭博; 以其類似魚餌也. (九百三十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Jangan-lah berjudi walau pun kamu menang: kerana kemenangan- mu itu sa-benar-nya ibarat mata kail berumpan yang di-telan ikan.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
이득을위한도박을피해야한다.그이득은물고기가삼킨미끼의고리와같다. (九百三十一)

რუსული (Русский)
Не играй в кости, даже если тебе и везет, ибо даже удача подобна крючку, заглатываемому рыбой

არაბული (العَرَبِيَّة)
لا تتعود القمار ولو أنك فائر فيه نجاحاتك ليست إلا كمثل شص يبتلغه السمـك (٩٣١)


ფრანგული (Français)
Que l'on ait horreur du jeu de hasard, même si l'on a l'habileté de gagner, car ce gain ressemble à l'hameçon amorcé, qui est dévoré par le poisson.

გერმანული (Deutsch)
Begehre nicht nach Glücksspiel, selbst nicht, wenn du gewinnst - was du gewinnst, ist wie der Fisch am Eisen des Angelhakens.

შვედური (Svenska)
Åstunda ej hasardspel ens om du vinner. Själva vinsten är lik den krok som fastnar i fiskens gap.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Aleam, etiamsi vincas, noli appetere. Vincere perinde est, ac si piscis ferrum hami deglutiat. (CMXXXI)

პოლონური (Polski)
Nie graj nigdy, choć byłbyś na razie wygrany, Bo los szczęścia to tylko przynęta.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மீனும் சூதாடுகிறவனும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மீன் பிடிப்பவன் ஆற்றில் அல்லது குளத்தில் தூண்டில் போடுகிறான்.

அந்தத் தூண்டில் முள்ளில் இருக்கிற இரையை, உணவு என்று எண்ணி ஏமாந்து, மீன் கவ்வும்போது, மீன் பிடிப்பவன் மீனையே இழுத்துப் பிடித்துவிடுகிறான். மீன் சிக்கிக் கொள்கிறது.

அதுபோல, சூதாட்டத்தினால் ஒருவன் வெற்றி பெற்று பொருள் பெறும் போது, சூதாடிகள், அந்த வெற்றியையே காரணமாக காட்டி, அவனை உற்சாகப்படுத்தி அவனுடைய பொருள் எல்லாவற்றையும் கவர்வதற்காக, அவனை இழுப்பார்கள்.

சூதாடி, முதலில் வெற்றி பெற்று சிறிது அளவு பெறலாம். ஆனால் பிறகு பல மடங்கு இழக்க வேண்டி இருக்கும். இதுவே சூதாடிகளின் வாழ்வு! அவர்கள் ஒருபோதும் சூதினால் நன்மை பெற்று வாழ வழியே கிடையாது. எனவே, சுதை விரும்பவே கூடாது.


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22