இராகத்தை மட்டும் பாடினால், எல்லோரும் அதை ரசித்து இன்பம் காணமுடியாது. ராகம் பாட்டோடு பொருந்தி இருந்தால் தான் அனைவரும் ரசிக்க முடியும். பாடுபவனுடைய இசையானது, பிறரைத் தன் வசப்படுகிறது.
அதுபோல, கருணையைப் பெற்ற கண்தான், காண்பவருக்கு மிக சிறந்த அழகைத் தருகிறது. எவன் கண்ணோட்டம் உடையவனோ, அவனுடைய கருணை நிறைந்த பார்வையால் உலக மக்கள் அவனிடம் வசப்பட்டு நிற்பார்கள்.
(கண் + ஓட்டம், கண் + நோட்டம் என்று பிரித்துக் கூறலாம். கண்ணோட்டம் என்பது கண் ஓடுதல் என்பதாகும். தன்னுடைய அன்பு கருத்தை கண் மூலம் பிறரிடம் செலுத்துவது)