மரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறியவர், அதையும் கடந்து அப்பால் செல்ல நினைத்தால், கீழே விழுந்து உயிரை விட நேரிடும்.
அதுபோல, பகைவர் மீது போர்க்களத்தில் முன்னேறிப் போகிறவர், தம்முடைய சக்தியை அறிந்து, அந்த அளவுக்குத்தான் போகலாமே தவிர, எழுச்சியினால்- ஊக்கத்தினால் மேலும், மேலும் செல்வதனால் வெற்றி காண முடியாது. அப்படி போவதால் அழிவு நேரிடும்.
எவரும் தம்முடைய திறமைக்கும், வலிமைக்கும் மீறிய காரியத்தைச் செய்யக் கூடாது.