அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமான நூல்களைப் படித்தவர் எப்படி இருப்பார்?
அத்தகைய நூல்களை படிக்காதவர் எப்படி இருப்பார்? அவர் இருவரையும் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, படிக்காதவர் மிருகத்துக்கு சமமானவர்.
மிருகங்களுக்கு அறிவு வளர்ச்சி தேவை இல்லை. ஆனால் பலம் பொருந்தியவை. மனிதன் சொல்படி நடக்கும்.
கல்வி அறிவு தான் மனிதனை மிருகத்திலும் உயர்ந்தவனாக ஆக்குவது.
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமென்றால், கல்வி அறிவு பெற்றிருப்பது மிகவும் முக்கியம்.