ಶಿಕ್ಷಣ

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.   (௩௱௯௰௫ - 395) 

ಐಶ್ವರ್ಯವಂತರ ಮುಂದೆ ಇಲ್ಲದವರು ನಿಲ್ಲುವಂತೆ, ಕಲಿತವರ ಮುಂದೆ ದೈನ್ಯದಿಂದ ಬಾಗಿನಿಂತು ಕಲಿತವರೇ ಶ್ರೇಷ್ಠರು; ಹಾಗೆ ಕಲಿಯದವರು ಕೀಳು ಜನರು.  (೩೯೫)

ტამილური (தமிழ்)
செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்! (௩௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். (௩௱௯௰௫)
— மு. வரதராசன்


செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே. (௩௱௯௰௫)
— சாலமன் பாப்பையா


அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள் (௩௱௯௰௫)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀧𑁄𑀮𑁆 𑀏𑀓𑁆𑀓𑀶𑁆𑀶𑀼𑀗𑁆 𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑁆
𑀓𑀝𑁃𑀬𑀭𑁂 𑀓𑀮𑁆𑀮𑀸 𑀢𑀯𑀭𑁆 (𑁔𑁤𑁣𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar
Kataiyare Kallaa Thavar
— (Transliteration)


uṭaiyārmuṉ illārpōl ēkkaṟṟuṅ kaṟṟār
kaṭaiyarē kallā tavar.
— (Transliteration)


The learned learn to humble, like destitute before the rich; Only the low never learn.

ჰინდი (हिन्दी)
धनी समक्ष दरिद्र सम, झुक झुक हो कर दीन ।
शिक्षित बनना श्रेष्ठ है, निकृष्ट विद्याहीन ॥ (३९५)


ტელუგუ (తెలుగు)
అణీఁగి మణిఁగి విద్య నార్జింపవలె నెల్ల
నున్నవారి చెంత నొదిగి నట్లు. (౩౯౫)


მალაიალამი (മലയാളം)
പാവങ്ങൾ ധനികർ മുന്നിലെന്നപോൽ പണ്ഢിതൻ മുന്നിൽ ഏങ്ങിനിന്നു പഠിച്ചുള്ളോർ യോഗ്യ രേഴകളന്യരും (൩൱൯൰൫)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
रिक्तवद्धनिकस्याग्रे विनीता गुरुसन्निधौ ।
भूत्वा पठन्ति ये नित्यं शिष्टास्ते निन्दिता: परे ॥ (३९५)


იაპონური (සිංහල)
උගතූන් ඉදිරියේ - නූගතූනගෙ බැගෑබව දනවතූන් අබියස - නිදනයන්ගේ බැගෑවට මෙනි (𑇣𑇳𑇲𑇥)

ჩინური (汉语)
卑辭曲躬以求學問, 雖如丐者之乞食, 楢有知識可得; 彼不向學而受敎者乃眞卑鄙耳. (三百九十五)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Walau pun di-hadapan guru kita terpaksa mcrendah diri saperti si- papa di-hadapan si-kaya, tetapi seduti-lah pengajaran-nya: hanya orang yang menolak ilmu sahaja-lah yang paling hina.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
부자가되기전에빈곤한자들처럼겸손하게교육받은자들은위대하다.다른자들은매우미천하다. (三百九十五)

რუსული (Русский)
Как нищий низко склоняется перед богачом, так и незнающий стоит перед тем, кто постиг свет знаний

არაბული (العَرَبِيَّة)
عليك أن تخضع أمام معلمك كـخضوع الفقير أمام صاحب الشردة فاذن يحصل لك العلم والذين هم أسافل بين الناس لا يكترثون بحصول العلم (٣٩٥)


ფრანგული (Français)
Les hommes instruits se tiennent devant les possédants comme des pauvres, dans la même attitude humble (qu’ils ont eue devant leur Maître) tandis que ceux qui ne sont pas instruits (parce qu’ils ont eu honte d’observer une telle attitude) sont les derniers des hommes.

გერმანული (Deutsch)
Wer gleich Armen vor Reichen demütig ist und lernt, ist der Höchste - wer nicht lernt, ist der Niedrigste.

შვედური (Svenska)
De olärda står lågt under de lärda, liksom de utblottade som står tiggande inför de rika.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Etiamsi submisso animo, ut paupcrcm coram divite, stare te opor-tcat, doctus (eris); infimo sempcr loco stabunt, qui nihil discent. (CCCXCV)

პოლონური (Polski)
Ale kiedy się uczysz, to czyń to w pokorze, Nicponiowi nikt ręki nie poda.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஏழ்மையும் கல்வியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

வறுமையில் வாடி துன்பத்துக்கு ஆளானவர், பணக்காரர் உடைய வாசலில் போய் நின்று தன் ஏழ்மையைக் கூறிக் கெஞ்சிக் கையேந்தி உதவி பெறுகிறார்.

அதுபோல, படிப்பறிவு இல்லாதவர், கற்று அறிந்த அறிவுடையார் முன் சென்று வணக்கத்தோடு பணிந்து நின்று கல்வி அறிவை பெற வேண்டும். அதுவே சிறப்பாகும். அப்படி கற்றுக் கொள்ளாதவர் தாழ்ந்தவரே.

செல்வத்தைவிடக் கல்வி மிகவும் முக்கியம். பொருள் கொடுத்தோ பணிந்து நின்றோ தொண்டு புரிந்தோ எவ்வழியிலாயினும் கல்வி பெறவேண்டும்.

அழிந்து போகக்கூடிய செல்வத்தைச் சம்பாதிக்க பாடுபடுவது போல, அழியாச் செல்வமான கல்வியை பெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.

கற்றவருக்கு உயர்வு; கல்லாதவர்க்கு தாழ்வு.


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22