அம்பு நேராகக் கூர்மையாக இருப்பது; ஆனால், அது செய்வதோ உயிர்க்கொலை.
யாழ் தண்டு கோணலாக வழைந்து இருப்பது; ஆனால் இசை எவுப்பி இன்பம் அளிக்கிறது.
ஒருவனுடைய குணங்களைக்கொண்டே, அவன் நல்லவனா,கெட்டவனா என்று அறிய வேண்டும்.
அதாவது, ஒருவன் தோற்றத்தால் கவர்ச்சியுடையவனாக இருந்து, ஒழுக்கத்தில் தீயவனாக இருந்தால், அவனை விலக்கி விடுவதே சிறப்பாகும்.