தனக்கு சொந்தம் அற்ற சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை கொள்கிறான் வஞ்ச மனத்தை உடையவன்.
பிறர் நம்பும்படி, பொய்யான தவ வேடம் பூண்டு, எல்லோரையும் ஏமாற்றி சுகபோகங்களை அனுபவிக்கிறான், தீய ஒழுக்கம் உடையவன்.
அந்தப் போலித் துறவியைப் பார்த்து பஞ்சபூதங்களும் அவன் உள்ளத்தில் இருந்த படியே அவனை இகழ்ந்து சிரிக்கும்.
உலகத்தார் அவனை அறிந்து சிரிப்பதற்கு முன்பே, அவனுடைய உள்ளத்திலேயே ஏளனம் இடம்பெற்றுவிடுகிறது.
(பஞ்ச பூதங்கள்- ஐந்து பூதங்கள் நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பன. அவற்றின் நுண்பொருள்; சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. அவற்றின் பரிணாமம்: மெய், வாய், கண், மூக்கு, சேவி ஆகியன).