உலக இயல்புக்குத் தக்கபடி, ஒருவருக்கொருவர் உதவி புரிந்து ஒத்து வாழ்கின்ற வாழ்வே சிறப்பான வாழ்வு ஆகும்.
தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களே, மற்றவர்களுக்கும் என்று பிறருடைய துன்பத்தை உணர்ந்து, உதவி செய்கிறவன் தான் உயிர் உள்ள மனிதன். அந்த உணர்ச்சி இல்லாதவன், செத்த பிணத்துக்கு ஒப்பானவன்.
வசதியும், வாய்ப்பும் இருந்தும் கூட ஒத்து உதவாதவன் எப்படிப்பட்டவன் என்றால் உயிருடன் இருந்தாலும் அவன் செத்தவனே, செத்தவர்களின் ஒருவனாகவே மக்கள் அவனை கருதுவார்கள்.
பிறருடைய துன்பங்களை கண்டாலும், மனம் இரங்காதவர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள் இருக்கிறார்களே!