நெல் பயிராக வளர்ந்து, கதிர்விட்டுப் பழுத்து, அதன் உள் அரிசி இல்லாதுபோனால், அதை நெல் என்று கூறுவது இல்லை. பதர் என்று ஒதுக்கப்பட்டுவிடும். அது குப்பை.
அதுபோல, மனிதனாகப் பிறந்து, வளர்ந்து, பேசும் வாய்ப்பு பெற்று அறிவு இல்லாத, வீன் சொற்களை விரிவாக திரும்பத்திரும்ப பேசுகின்றவனை செய்திகள் மனிதன் என்று சொல்லமாட்டார்கள். மனிதரில் பதர் என்று தான் சொல்வார்கள்.
வீண் பேச்சுப் பேசி, நேரத்தை வீணாக்காமல், அறிவு சார்ந்த பேச்சுக்களைப் பேசுவது பயன் தரும் என்ற கருத்தை உணரச்செய்கிறது.
(பதர் என்றால் குப்பை, பயன் இல்லாதது என்று அர்த்தம்- பதடி என்றாலும் அதே அர்த்தம் தான்)